Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ்க்கு கிடைத்த பெரும் வரவேற்பு! குஷியான ரசிகர்கள்

நடிகர் தனுஷ் ஏற்கனவே பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக நிரூபித்து விட்டார். இப்படத்தின் அடுத்த பாகமும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் பாலிவுட், ஹாலிவுட் என படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு அடுத்தாக வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படம் வெளியாகவுள்ளது. நீண்ட நாளாக எதிர்பார்ப்பில் உள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது.

தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28 ம் நாள் டீசர் வெளியானது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஸுடன் ஒரு முத்தக்காட்சிகளும் இருந்தது.

இந்நிலையில் டீசர் 4 நாட்களில் 5 மில்லியன் (50 லட்சம்) பார்வைகளை கடந்துள்ளது.