கமல்ஹாசனின் மீது பலரின் பார்வையும் திரும்பியுள்ளது என்றே சொல்லலாம். தற்போது அவர் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். வார இறுதி நாட்களில் அவரை காணவே ஒரு கூட்டம் இருக்கிறது.
மேலும் அவரின் அரசியல் பயணமும் தொடங்கிவிட்டது. வரும் ஆகஸ்ட் 10 ம் தேதி அவரின் விஸ்வரூபம் 2 படமும் வெளியாகவுள்ளது. நீண்ட நாளாக எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் காண ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.
உலகம் முழுக்க 5000 தியேட்டர்களில் வெளியாகும் இப்படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் இன்று முதல் ஹைதராபாத்தில் இப்படத்திற்கான விளம்பர வேலைகளில் ஈடுபடுகிறாராம்.
மேலும் அவர் தொடர்ந்து தெலுங்கு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கவுள்ளாராம்.