வடசென்னை படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வைரலானது. யூடியுப்பில் மூன்று நாட்களாக இது ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருந்தது. தற்போது வரை இதை 6.1 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
சில நாட்கள் முன்பு பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் இந்த படம் பற்றி ட்விட்டரில் பதிவிட்டிருந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் பிரபல இயக்குனரும் நடிகருமான அனுராக் கஷ்யப் ட்விட்டரில் "இந்த படத்திற்காக மிக ஆர்வமுடன் காத்திருக்கிறேன்" என ட்விட்டரில் கூறியுள்ளார். இவர் நயன்தாராவின் ஜமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபல இயக்குனர் ஆனந்த் எல் ராயும் இந்த படத்தை பாராட்டி பேசியுள்ளார்.
“Vadachennai” by @VetriMaaran starring @dhanushkraja .. the film I am dying to see https://t.co/VXNgkAS1oF
— Anurag Kashyap (@anuragkashyap72) August 3, 2018
Deadly combo of @VetriMaaran, the GEM of Indian cinema AND mera bhai @dhanushkraja is back. Take a bow CHAMPS. https://t.co/mqThiIXjFS Cant wait. #VadaChennai
— AANAND L RAI (@aanandlrai) August 3, 2018