Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனின் சீமராஜா! என்ன இருக்குனு உள்ளே பாரு ராஜா

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் மாஸான நடிகர். அவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன் என அடுத்தடுத்து அவருக்கு ஹாட்ரிக் வெற்றி தான்.

தற்போது அவர் ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். பொன்ராம் இயக்கத்தில் அவர் நடித்து முடித்துள்ள சீமராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது.

இதில் இப்படத்தின் டீசர் வெளியானது. சமந்தா இதில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இமான் இசையில் சூப்பர் சிங்கர் திவாகர் வாரேன் வாரேன் சீமராஜா என ஒரு பாடலை பாடியுள்ளார். இப்பாடல் பலரையும் ஈர்த்தது.

டீசர் வெளியாகி ஒரு மணி நேரத்திலேயே 1 லட்சம் பார்வைகளை தாண்டியுள்ளது. 2 மணி நேரத்தில் 4 லட்சம் பார்வைகளை தாண்டி சென்றது.