Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கருணாநிதி விசயத்தில் தயவு செய்து அதை செய்ய வேண்டாம்! பிரபல நடிகர் கெஞ்சல்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக பல சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீவிர கண்காணிப்பில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மீண்டும் நலம் பெற்று வரவேண்டும் என பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

அவரின் நலன் குறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று அஜித், விஜய், ரஜினி, சிவகார்த்திகேயன், விக்ரம், விஷால் என அவரின் மகன் ஸ்டாலினிடம் விசாரித்து வருகிறார்கள்.

அதே வேளையில் கேலி கிண்டல் செய்யும் வகையில் மீம்களும் இடம் பெற்றன. இதை சிலர் எதிர்த்தனர், இந்நிலையில் காமெடி நடிகர் சதீஷ் அண்மையில் நடந்த சினிமா விழாவில் கலைஞர் பற்றிய மீம்ஸ் வருத்தமளிக்கிறது. அப்படியெல்லாம் கிண்டல் செய்யாதீர்கள்.

அவரின் வயதுக்கும், அவர் வகித்த பதவிகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்.