சூர்யா ரசிகர்களிடம் சண்டையிடாமல் தளபதி பாணியில் அசத்திய விஜய் ரசிகர்கள்- இந்த விஷயத்துக்காக தானா
தற்சமயம் டிவிட்டரில் ஹாட்டாக உலா வரும் விஷயம் எதுவென்றால், விஜய், சூர்யா ரசிகர்களின் சண்டை தான். சூர்யாவின் NGK படத்தின் ரிலீஸ் விஷயமாக தயாரிப்பாளர் S.R.பிரபு பேசியபோது, Not worth it என்ற வார்த்தையை சொல்லிவிட்டார்.
அவ்வளவுதான் அப்போது ஆரம்பித்த சண்டை இன்னும் சென்று கொண்டிருக்கிறது. இதனால் #NotWorthItSARKARfans என்ற ஹாஸ்டேக் பயங்கர டிரெண்ட் ஆனது. இதையெல்லாம் பார்த்த S.R.பிரபு ’சண்டை போடாத்தீங்கன்னு சொன்னா...அதுக்கும் புது அர்த்தம் கண்டுபுடிச்சு அடிச்சுக்கறீங்களேப்பா?’ என கேட்க இதனால் சண்டை மேலும் தீவிரமடைந்தது.
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் தரப்பில் இருந்து மாலை 6.30 மணிக்கு புதியதாக ஒரு ஹாஸ்டேக் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது ஏதோ சூர்யாவை கலாய்க்கும்படி இருக்கும் என எதிர்ப்பார்க்கபட்டது.
ஆனால் அதுவோ #UnrivalledSarkarVIJAY என சாதாரணமாக இருந்தது. மேலும் ’சண்டைகள் வேண்டாம், நாம் அமைதியாகவே இருப்போம்’ எனவும் அறிக்கை வந்தது. தளபதி கூறுவது போல எதிர்மறையான விஷயங்களை அவர்கள் ரசிகர்கள் ஒதுக்கிவிட்டார்கள் போல என்று தோன்றுகிறது.
Here We Go!!
— Vijay Fans Trends (@VijayFansTrends) August 5, 2018
Tag To Celebrate This Great Evening 😊 Whatever May Happen Against Us..Just Stay Calm & Reply Them in A Positive Way 🔥 Everyone Knows Our Standard !!
Tag : #UnrivalledSarkarVIJAY pic.twitter.com/D3wxvABK0e