Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யால் மட்டுமே இதை செய்ய முடியும்! ஒன்று திரண்ட திரையுலகம்

விஜய் தற்போது முருகதாஸ் இயக்கிவரும் சர்க்கார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முக்கிய பாடல் காட்சிகள், ஒரு சில படக்காட்சிகள் அமரிக்காவில் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக நேற்று முன் தினம் படக்குழு அங்கு கிளம்பி சென்றது. படத்தில் இணைந்துள்ள வரலட்சுமி அவ்வப்போவது அப்டேட் கொடுத்து வருகிறார்.

அதே சமயம் விஜய்யின் அடுத்த படம் மீண்டும் இயக்குனர் அட்லீயுடன் தான் என சொல்லப்பட்டு வருகிறது. இவர் தெறி, மெர்சல் என பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை இயக்கியவர். இந்நிலையில் லைக்கா நிறுவனம் அண்மையில் வெளியான அந்தரிண்டிகி தாரேதி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளதாம்.

பவன் கல்யாண் நடிப்பில் 2016 ல் வெளியான இப்படம் பெரும் ஹிட்டானதோடு பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது. ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டதாம். மேலும் கன்னடத்தில் நடிகர் சுதீப்பும் நடித்துள்ளாராம். தற்போது தமிழில் விஜய்யால் மட்டுமே சிறப்பாக நடிக்க முடியும் என தெலுங்கு வட்டாராம் கூறி வருகிறதாம்.