Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கருணாநிதிக்கு பின்னால் பலருக்கும் தெரியாத விசயங்கள்! யார் இந்த கலைஞர்

கருணாநிதி தமிழக அரசியல் மிக முக்கியமான தலைவராக இருந்தவர். 5 முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர். அவரின் பங்கு சினிமா, நாடகத்திலும் இருக்கிறது.

நாடகங்களுக்கு கதை எழுதியவர் அதில் நடித்திருக்கிறாராம். பழனியப்பன், தூக்குமேடை, மணிமகுடம், விமலா அல்லது விதவையின் கண்ணீர், வாழ முடியாதவர் என அவரின் நாடகங்கள் பெயர் பெற்றது.

தூக்கு மேடை நாடகத்தின் போது தான் கருணாநிதிக்கு கலைஞர் பட்டத்தை கொடுத்து கவுரவித்தார் பிரபல நடிகர் நடிகவேள் எம்.ஆர்.ராதா பாராட்டினார். பின் இன்று வரை அந்த பெயர் நிலைத்து நின்றது.

ராஜ குமாரி படத்தில் வசனகர்த்தாவாக சினிமாவில் கால் பதித்தவர், மந்திர குமாரி, மருதநாட்டு இளவரசி, மர்மயோகி படங்கள் அவரை தேடி வந்தது.

பின்னர் 1970 களில் ஜெய் சங்கர் நடித்த வண்டிக்காரன் மகன், ஆடுபாம்பே படங்களுக்கு பயங்கரமான வசனங்களை கொடுத்தவர். 1980 களில் சத்யராஜ், பிரபு, நளினி நடித்த பாலைவன ரோஜாக்கள், தூக்கு தண்டனை, நீதிக்கு தண்டனை போன்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கு எதிரான வசனங்களை எழுதியிருந்தாராம்.

காதல், அரசியல், பண்பாடு, வரலாறு என பல பரிமாணங்களில் திறமைகாட்டியவர் 29 படங்களை சினிமாவில் தயாரித்துள்ளார். 75 படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார்.

சின்னத்திரையில் ராமானுஜர் என்ற காவியத்தை எழுதியுள்ளார். அரசியல் ஆட்சி செய்தவர் மை பேனா பிடித்து புத்தகங்களையும் ஆட்சி செய்துள்ளார்.