Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராஜமௌலியின் அடுத்த படத்தில் இந்த தமிழ் நடிகர் நடிக்கிறாரா?

இயக்குனர் ராஜமௌலி பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தற்போது அடுத்த படத்தின் பணிகளில் பிஸியாக உள்ளார். ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிக்கவுள்ள இந்த படத்தின் முதல் கட்டப்பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சசிகுமார் சமூக வலைத்தளத்தில் ராஜமௌலியை சந்தித்தபோது எடுத்த போட்டோவை வெளியிட்டார். அதனால் அவர் ராஜமௌலியின் அடுத்த படத்தில் நடிக்கலாம் என தகவல் பரவியது.

ஆனால் அது உண்மையில்லை என தற்போது விளக்கம் அளித்துள்ளனர். சசிகுமார் தான் இயக்கவுள்ள வரலாற்று படத்தின் டிஸ்கஷனுக்காக தான் ராஜமௌலியை நேரில் சென்று சந்தித்தாராம்.

தற்போது சசிக்குமார் நடிப்பில் நாடோடிகள் 2 மற்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.