Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாரி மூன்றாம் பாகம் வருமா? தனுஷ் சூசகமான அறிவிப்பு

நடிகர் தனுஷ் வடசென்னை டானாக நடித்திருந்த மாரி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் அதன் இரண்டாம் பாகமும் தற்போது உருவாகி வருகிறது.

சாய்பல்லவி, வரலக்ஷ்மி என இரண்டு ஹீரோயின்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். நேற்று படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது என தனுஷ் ட்விட்டரில் அறிவித்தார்.

மேலும் மாரியாக மீண்டும் நடிக்க மிக ஆவலாக உள்ளேன் என கூறியுள்ளார். அதனால் மாரி 3 படம் நிச்சயம் வரும் என்பதைத்தான் தனுஷ் சூசகமாக தெரிவித்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில்உள்ளனர்.