Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகரால் அனிருத்க்கு வந்த சோதனை! எதிர்பாராத சிக்கல்!

அனிருத் என்றால் தமிழ் சினிமாவில் அத்தனை பேருக்கும் தெரியும். இளம் வயதில் பல சாதனைகளை செய்துள்ள அவருக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஓய் திஸ் கொலவெறி பாடல் மூலம் பிரபலமானவர் தற்போது தமிழ் சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா, அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு வருகிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு இவர் தான் இசையமைக்கவுள்ளார். தெலுங்கில் அண்மையில் பவன் கல்யாண் நடித்த அஞ்ஞாதவாசி படத்திற்கு இசையமைத்தார்.

தெலுங்கில் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இப்படம் கடும் விமர்சனங்களுக்கு நடுவே தோல்வியானது. படத்தில் சில காட்சிகளையும் ரிலீஸ்க்கு பிறகு நீக்கினார்கள். அதுவும் கைக்கொடுக்கவில்லை.

இந்நிலையில் அவருக்கு அடுத்த படமாக ஜெர்சி வந்துள்ளது. இதற்கு இசையமைக்க ரூ 1 கோடி சம்பளம் கேட்டாராம்.

ஆனால் படக்குழு முந்தய படத்தில் தோல்வியை காரணம் காட்டி சம்பளத்தை குறைக்கவைத்து ரூ 80 லட்சத்திற்கு ஓகே செய்ய வைத்து விட்டார்களாம்