Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கஉள்ளதாக பல்வேறு இயக்குனர்கள் பேசி வந்தனர். இந்நிலையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் தற்போது அந்த பொறுப்பை கையில் எடுத்துள்ளார்.

இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. தமிழ் சினிமா, பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாவின் பல முன்னணி பிரபலங்கள் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Vibri Media தயாரிக்கவுள்ள இந்த படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் படமாக்க உள்ளனர். இதே நிறுவனம் தான் தற்போது தெலுங்கு நடிகரும்-முன்னாள் முதலமைச்சருமான எண்டிஆரின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.