Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவின் செக்க சிவந்த வானம் படத்தில் இப்படியும் ஒரு ஸ்பெஷல்!

மணிரத்னம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி, ஜோதிகா, என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் அவர்களின் தோற்றங்களில் அண்மையில் அடுத்தடுத்து போஸ்டர்களாக வெளியாகின. இதில் சிம்புவுக்கு ஜோடியாக டயானா எரப்பா நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய பெய்யெனப் பெய்யும் மழை கவிதை தொகுப்பிலிருந்து இரண்டு கவிதைகளை எடுத்து மணிரத்னம் ஏ.ஆர்.ரஹ்மானிடன் கொடுத்து இசையமைக்க கூறியுள்ளாராம்.

அதில் முதல் கவிதை மழைக்குருவி, இரண்டாம் கவிதை மெய்ப்பொருள் என்பதாம்.