Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தப்பு செய்துவிட்டு இப்படி பேசுவதா.. ஸ்ரீரெட்டியை வெளுத்து வாங்கிய பிரபல தமிழ் நடிகை

நடிகை ஸ்ரீரெட்டி பல்வேறு சினிமா துறை பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டார். அடுத்து தமிழில் ஒரு சில படங்களில்நடிக்கவுள்ளார்.

படவாய்ப்புக்காக அவரை பாலியல் ரீதியாக பயன்படுத்திகொண்டதாக ஸ்ரீரெட்டி கூறினாலும் அவர் விபச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டு இப்போது சர்ச்சை ஏற்படுத்துவதாக பலரும் குறைகூறினர்.

இந்நிலையில் தற்போது ஸ்ரீரெட்டி பற்றி பேசியுள்ள பிரபல நடிகை ப்ரியா பவானி ஷங்கர். "தவறு செய்துவிட்டு அதை இப்படி வெளிப்படையாக கூறுவது சரியல்ல" என கூறியுள்ளார்.

அனைத்து துறைகளிலும் பாலியல் வன்கொடுமை இருக்கிறது. அதனை ஏற்றுகொள்வதும், மறுப்பதும் நம் கையில் தான் உள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.