Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிகரெட் vs மூட நம்பிக்கை! இணையத்தில் விஜய்-அஜித் ரசிகர்கள் மோதல்

விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளிவந்ததில் இருந்து விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே வழக்கமாக நடக்கும் மோதல் கொஞ்சம் அதிகரித்துள்ளது.

படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட வியாழக்கிழமை செண்டிமெண்ட் பார்த்ததோடு மட்டுமல்லாமல் நல்ல நேரம் பார்த்து அதிகாலை 3.40 மணிக்கு வெளியிட்டதை பற்றி விமர்சித்து 'அஜித் மூடநமிபிக்கையில் மூழ்கி உள்ளார்" என கூறிவருகின்றனர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிவரும் அஜித் ரசிகர்கள் சர்கார் போஸ்டரில் புகைபிடிக்கும் காட்சி இருந்து பெரிய சர்ச்சை ஆகி அதை பின்னர் டெலீட் செய்தது பற்றி விமர்சித்து வருகின்றனர்.

அது தவறா, இது தவறா என தொடர்ந்து கருத்து மோதல் நீடித்துவருகிறது.