Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரூ 1000 கோடி பட்ஜெட் படத்தில் எனக்கு அது நிச்சயம் வேண்டும்! அதிரவைத்த பிரபல நடிகர்

இப்போதெல்லாம் சினிமாவில் நல்ல படங்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை ஒதுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். அப்படியான ஒரு படம் தான் பாகுபலி.

வரலாற்று கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் சாதனைகளை குவித்தது. இந்நிலையில் மகாபாரதம் எடுத்த பிரம்மாண்ட படம் தயாராவுள்ளது.

முகேஷ் அம்பானி ரூ 1000 கோடியில் இப்படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார். இதில் அமீர்கான் நடிக்கவுள்ளார். பல பெரிய கதாபாத்திரங்கள் இருக்கையில் அவர் தன்னை மிகவும் கவர்ந்தது இரண்டு வேடங்கள் தான்.

ஒன்று ஸ்ரீ கிருஷ்ணன், இன்னொன்று கர்ணன். இந்த இரண்டில் எனக்கு எதுவானாலும் ஓகே என கூறியுள்ளார். இந்நிலையில் அவரை கிருஷ்ணன் கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளார்களாம்.

இதிகாச புராணம் என்பதாலும் இக்கதைக்கு நிறைய ஆராய்ச்சி தேவை என்பதால் இப்படத்தை முன்பே வேண்டாம் என்று சொன்ன அமீர்கான், தற்போது நடித்து வரும் தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான் படத்தை தொடர்ந்து அப்படத்தில் நடிக்கவுள்ளாராம். இதில் தீபிகா படுகோன் நடிக்கவுள்ளது குறிப்படத்தக்கது.