Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யாருக்கும் சொல்லாமல் ஷூட்டிங்கில் இருந்து பாதியிலேயே ஓடிய நடிகை! அப்படி என்ன நடந்தது?

அவளுக்கென்ன அழகியமுகம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் நடிகை அனுபமா பிரகாஷ். A.கேசவன் இயக்கும் இந்த திரைப்படத்தின் பாடல் காட்சிகளை கொடைக்கானல் மலை உச்சியில் படமாக்கிக்கொண்டு இருந்தனர்.

அங்கு மிக உயரமான இடத்தில் வைத்து பாடலை ஷூட் செய்துள்ளனர். உயரமான இடத்தில் நிற்கவைத்ததால் பயத்தில் இருந்த நடிகை அனுபமா பிரகாஷ். மாலை படப்பிடிப்பு தளத்தில் இருந்து தனது அறை வரை சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றவர், யாரிடமும் சொல்லாமல் மதுரையில் இருந்து விமானம் மூலம் தனது சொந்த ஊர் டெல்லிக்கு சென்று விட்டார்.

இது தெரியாமல் அவரை கொடைக்கானல் முழுவதும் படக்குழுவினர் தேடியுள்ளனர். பின்பு தான் தெரிந்தது அவர் டெல்லி சென்றது. பின்னர் உடனே தயாரிப்பாளர் டெல்லிக்கு சென்று சமாதானம் செய்து மீண்டும் படபிடிப்பிற்கு அழைத்து வந்துள்ளார்.