Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னை ஷூட்டிங் முடிந்தது! ரஜினி படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் எங்கு தெரியுமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தை முடித்தபிறகு இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இதுவரை டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் ஷூட்டிங் நடந்த நிலையில் சென்னையில் பின்னி மில்லில் தற்போது ஷூட்டிங் நடந்து வந்தது.

ரஜினி - விஜய் சேதுபதி மோதிய அதிரடி சண்டைக் காட்சி இங்கு படம் பிடிக்கப்பட்டது. மேலும் ஷூட்டிங் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

அடுத்தகட்ட ஷூட்டிங்கிற்காக லடாக் மற்றும் ஐரோப்பாவிற்கு செல்லவுள்ளது படக்குழு. ஐரோப்பிய நாடுகளில் 40 நாட்களை ஷூட்டிங் நடத்த இயக்குனர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.