Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி, விஜய் சேதுபதி, திரிஷாவுடன் முக்கிய படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அண்மையில் வில்லாக நடிக்கும் விஜய் சேதுபதி, ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.

அடுத்ததாக இப்படத்தின் முக்கிய காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்படவுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் நடிகை சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, திரிஷா என பலரும் இணைந்துள்ளார்கள்.

இந்நிலையில் இப்படத்தில் ஜோக்கர் படத்தின் பிரபல நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல பட வாய்ப்புகளை தன்னை தேடி வந்த போதிலும் நல்ல கதைகளை மட்டுமே குரு தேர்வு செய்துவருகிறார்.