Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதலனை பிரிந்து பிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக வரும் பிரபலம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 தமிழில் இறுதிகட்டத்தை எட்டவுள்ளது. கமல்ஹாசன் இதை தொகுத்து வழங்கி வருகிறார். மற்ற மொழிகளை விட தமிழ் பிக்பாஸ்க்கு நல்ல வரவேற்புள்ளது என அவரே முன்பு கூறியிருந்தார்.

ஆனால் ஹிந்தியில் இது பல சீசன்களை கடந்து தற்போது 12 வது சீசனை எட்டியுள்ளது. இதை சல்மான் கான் மீண்டும் தொகுத்து வழங்கவுள்ளார். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் புரொமோக்கள் வெளியாகிவிட்டது.

இதில் இவர்கள் தான் கலந்துகொள்ளப்போகிறார்கள் என சிலரின் பெயர் அடிப்பட்டது. இதில் ஆபாச பட நடிகர் டேனியும், நடிகை மஹிகா சர்மாவின் பெயரும் இருந்தது.

ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் அடுத்ததாக டிவி பிரபலம் Newlywed Dipika Kakar கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் முன்பு நடன நிகழ்ச்சியில் Shoaib உடன் ஜோடியாக கலந்துகொண்டு நடனமாடினார். இருவரும் காதல் ஜோடியாகி திருமணம் செய்துகொண்டார்கள்.

அண்மையில் கூட அவர் தேனிலவு கொண்டாடியதை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார். அவர் தன் காதலர் Shoaib ஐ விட்டுவிட்டு இன்னும் இருவாரங்களில் பிக்பாஸ் வீட்டிற்குள் வரப்போகிறாராம்.