Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெரும் சாதனை நாயகனாக மட்டுமில்லாமல் ஆசை நாயகனாக மாறிய அஜித்!

ரசிகர் மன்றமே இல்லாமல் மாஸ் காட்டும் ஒரு நடிகர் என்றால் அது அஜித் தான். தன் ரசிகர்கள் நலனில் எப்போதும் மிகுந்த அக்கறை கொண்டவர். அவருடன் நடிக்க வேண்டும் என பலருக்கும் ஆசை இருக்கும்.

குறிப்பாக நடிகைகளுக்கு. ஆனால் படப்பிடிப்பில் பணியாற்றும் அத்தனை பேருக்கும் அவர் ஆசை நாயகன் தான். அவரை பலரும் கொண்டாட பல காரணங்கள் உண்டு.

ஆசை நாயகனாக ரசிகர்களுக்கு அவர் மாறி தருணம் ஆசை படத்தின் மூலம் என்றும் சொல்லலாம். 1995 ல் வசந்த் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அவருக்கு ஜோடி சுவலட்சுமி.

அஜித் தமிழில் ஹீரோவாக நடித்த ஐந்தாவது படம். சிறந்த இசையமைப்பாளர், சிறந்த இயக்குனர், சிறந்த பின்ணணி பாடகர் என மூன்று தகுதிகளில் படம் தமிழக அரசு விருதை பெற்றுள்ளது.

இப்படம் தற்போது 23 வருட கொண்டாட்டங்களை எட்டியுள்ளது. ட்விட்டரில் நள்ளிரவு முதலே இதற்காக #23YrsOfEvergreenAasai என்ற டேக் ட்ரெண்டாகியுள்ளது.

இப்படத்தின் சாதனைகள்..

  • கேரளாவில் 100 நாட்களை கடந்து ஓடியுள்ளது.
  • அஜித்துக்கு முதல் பிளாக் பஸ்டர் படம்.
  • ஆசை 300 நாட்களை கடந்து ஓடிய படம்.