Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் அடுத்த படத்தில் மாஸ் காம்பினேஷன் இதோ! போடு தகிட தகிட

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு துரிதமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகிவிடுகிறது.

அண்மையில் வந்த போஸ்டர் எல்லோரையும் கொண்டாடவைத்தது. இந்நிலையில் அவரின் அடுத்த படத்தை தீரன் பட இயக்குனர் வினோத் இயக்குவதாக தகவல் முன்பே வெளியானது.

இப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார். தற்போது யுவன் இப்படத்திற்கு இசையமைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அஜித் யுவன் கூட்டணியில் பில்லா, மங்காத்தா, ஆரம்பம் படங்கள் வெளியானது. அதிலும் மங்காத்தா தீம் மியூசிக் இன்றும் ரசிக்கும் ரகம் தான்.