Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் இவ்வளவு தாமதம் ஆவதற்கு இது தான் காரணம்? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க

தல அஜித் தற்சமயம் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித்தின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தை இந்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். அப்படி முடிக்காவிட்டாலும் அடுத்த மாத தொடக்கத்தில் முடித்தே ஆக வேண்டும் என சிவாவுக்கு தயாரிப்பாளர் தியாகராஜன் கூறியுள்ளாராம்.

படம் கடந்த பல மாதங்களாக ஷூட்டிங் தள்ளிபோய் நீண்டநாட்களாக படப்பிடிப்பில் இருந்த வருகிறது. தயாரிப்பாளர் சங்கம் செய்த ஸ்டிரைக்கும் இந்த தாமதத்திற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், மிக முக்கியமான காரணம் யார் என்றால், அது வேறு யாரும் இல்லை நம்ம தல அஜித் தானாம்.

ஐதராபாத்தில் நடந்து வரும் இதன் படப்பிடிப்பு முதலில் தேனியை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தத்தான் திட்டமாம். ஆனால் ரசிகர்களின் அன்பு தொல்லை அதிகமாக இருக்கும் என்பதால் அஜித் தான் படப்பிடிப்பை மாற்றிவிட்டாராம்.

இந்த விஷயம் தற்போது தான் லீக்காகியுள்ளது.