Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா படத்தை நீதிபதிகள் பார்க்க வேண்டும்! உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்த நபர்

சூப்பர்ஸ்டார் நடித்த காலா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படம் வசூலிலும் லாபம் கொடுத்ததாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது காலா படத்தை குறிப்பிட்டு நீதிமன்றம் வரை ஒரு வழக்கு சென்றுள்ளது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அணைத்து நீதிபதிகளும் காலா படம் பார்க்க வேண்டும் என கேட்டுள்ளார். தாம்பரம் அருகே புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்த 24 குடும்பங்களை கடந்த 2010ம் ஆண்டு அப்புறப்படுத்திய குடிசை மாற்று வாரியம் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கவில்லை.

நிலம் இல்லாதவர்கள் கஷ்டம் குறித்து 'காலா' படத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் அதை புரிந்து கொள்வதற்காக மாஜிஸ்திரேட் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரை அனைவரும் பார்க்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் மனுவில் அவர் கூறியுள்ளார்.