Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிட்டி இஸ் பேக்! 2.0 டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா.. கதை இதுதான்

மிக பிரமாண்டமாக ரூ 500 கோடி மேல் பட்ஜெட் செலவழித்து தயாரிக்கப்பட்டுள்ள எந்திரன் 2.0 படத்தின் டீஸர் சற்றுமுன் வெளிவந்தது. அதன் மூலம் 2.0 கதை இதுவாகத்தான் இருக்கும் என முற்றிலும் கணிக்க முடிகிறது.

முதல் பாக இறுதியில் பிரித்தெடுக்கப்பட்ட சிட்டி ரோபோவை திரும்பவும் மீட்டெடுக்க வசீகரன் மற்றும் அரசுக்கு அவசியம் ஏற்படுகிறது. காரணம் ஊரில் உள்ள அனைத்து செல்போன்களும் திடீரென பறந்துசென்று மர்மமான பல விஷயங்களை செய்வதுதான்.

ஒரு பிரம்மாண்ட பறவை வடிவம் காட்டப்படுகிறது, அதை சிறைபிடிக்க பல சிட்டி போன்ற ரோபோக்கள் சிறை போன்ற வடிவமைப்புக்கு மாறுகின்றன. இதே போன்ற காட்சிகள் எந்திரன் கிளைமாக்ஸில் நாம் பார்த்திருப்போம். அதனால் இந்த சீனும் 2.0 கிளைமாக்ஸில் வரலாம்.

இறுதியில் ஒரு ஸ்டேடியத்தில் பறவை வடிவத்துக்கு மாறும் செல்போன்களை தாக்க சிட்டி ரோபோ 360 டிகிரி சுடும் துப்பாக்கி பயன்படுத்துவது காட்டப்பட்டுள்ளது. அதானால் சிட்டிக்கு 2.0வில் மேலும் பல வித்யாசமான பவர் கொடுக்கப்பட்டிருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.

இதையெல்லம் விட வில்லன் அக்ஷய் குமாரின் ரோல் என்ன அதன் பின்னணி என்ன என்பது இன்னமும் மர்மமாகாத்தான் உள்ளது.

எது எப்படியோ, சிட்டி 2.0 வுக்கும் பறவை மனிதனுக்கும் நடக்கும் யுத்தம் தான் இந்த 2.0 படம்.