Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உரிமையை மீட்கும் விசயத்திற்காக மறுபடியும் விஸ்வரூபம் எடுக்கும் காலா?

ரஜினி காந்த் நடிப்பில் காலா கடந்த ஜூன் மாதம் வெளியானது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் இருந்தாலும் எதிர்பார்த்த அளவில் வசூல் இல்லை என்பதே உண்மை.

நிலம் எங்கள் உரிமை என்பதை மையப்படுத்தி இப்படத்தை இயக்குனர் ரஞ்சத் இயக்கியிருப்பார். அண்மைகாலமாக எட்டு வழிச்சாலைக்காக விவசாய நிலங்கள் கையப்படுத்தப்படுவது சர்ச்சையாகியுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் மத்திய பிரதமர் அலுவலகமும், சட்ட அமைச்சகமும் சேர்ந்து நாட்டில் உள்ள மாஜிஸ்திரேட்கள் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரை அனைவரையும் காலா படத்தை பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

நிலம் இல்லாதவர்களின் துன்பத்தை நீதிபதிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படியாக நான் கேட்கிறேன் என அந்த மனுதாரர் கூறியுள்ளார்.