ரசிகர்கள், ரசிகைகள் பலரையும் ஈர்த்த படம் அர்ஜூன் ரெட்டி. இளைய தலைமுறையால் அதிகம் ரசிக்கப்பட்ட இப்படம் நல்ல வசூலையும் அள்ளியது. இப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
இதில் ஷாகித் கபூர் ஹீரோவாக நடிக்க தாரா சுதாரா ஜோடியாக நடிக்க கமிட்டானார். ஆனால் அவர் படத்தை பார்த்துவிட்டு இதில் இருந்த அடல்ட் காட்சிகள், முத்தக்காட்சிகளில் நடிக்க முடியாது என விலகிவிட்டாராம்.
தற்போது இப்படத்திற்கான புதுமுக ஹீரோயின் தேர்வு நடைபெற்று வருகிறதாம். விரைவில் தகவல்கள் வெளியிடப்படவுள்ளது.