Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2.0 டீஸர் இருக்கட்டும்.. தற்போது மெர்சல் டீஸர் சைலண்டாக செய்துள்ள புதிய சாதனையை பாருங்க

சமீபத்தில் வெளிவந்த 2.0 டீஸர் மிக பிரமாண்டமாக இருந்தாலும் தமிழில் விஜய்யின் மெர்சல் செய்த சாதனையை நெருங்கவே முடியவில்லை என விமர்சனம் எழுந்தது.

ஒரு லட்சம் லைக் பெற 37 நிமிடம் ஆனது, ஆனால் அதே அளவு லைக் 10 நிமிடத்தில் மெர்சல் பட டீஸர் பெற்றிருந்தது. மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளிவந்திருந்த 2.0 டீஸர் 24 மணி நேரத்தில் youtube தளத்தில் மொத்தமாக 24.8 மில்லியன் ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, மெர்சல் டீஸர் தற்போது 40 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இவ்வளவு பெரிய பிரம்மாண்ட சாதனை மைல்கல்லை கடந்துள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த சாதனையை 2.0 தமிழ் டீசர் தொடுமா என்பது சந்தேகம்தான்.