Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாமி ஸ்கொயர் இருக்கட்டும்! தன் ஆசையை மனம் விட்டு வெளியே சொன்ன விக்ரம்

விக்ரம் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவர் நடிப்பில் சாமி ஸ்கொயர் இன்று வெளியாகியுள்ளது. ஹரி இயக்கியுள்ள இப்படத்தில் அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படம் குறித்து அவர் பேசியுள்ளார்.

இதில் இப்படத்தில் இரண்டு விதமான ரோலுக்காக உடல் எடையை அதிகப்படுத்தி நடித்திருக்கிறேன். திரிஷா இல்லாதது வருத்தம் தான். கீர்த்தி, ஐஸ்வர்யா இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

அடுத்து கமல் ஹாசன் தயாரிப்பில் நடிக்கப்போகிறேன். அடுத்தது கர்ணன் 37 மொழிகளில் தயாராகவுள்ளது. என் மகன் துருவ் பாலா இயக்கத்தில் வர்மா படத்தில் நடித்துள்ளார்.

தற்போது படிப்பிற்காக அமெரிக்கா சென்றுவிட்டார். வர்மா படத்திற்கு பிறகு அவரின் அடுத்த படம் முடிவாகும். அவர் என்னை போல வரவேண்டாம். அவருக்கென ஒரு அடையாளம் வேண்டும்.

மகனுடன் எனக்கு போட்டியிருக்காது. அதே வேளையில் மகள் நன்றாக இருக்கிறார். விரைவில் நான் தாத்தா ஆகவேண்டும் என்ற ஆசையிருக்கிறது. அதற்கு இன்னும் கொஞ்ச நாளாகும் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

loading...