Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வாய்க்கு வந்தபடி விமர்சித்தவர்களை வியக்க வைத்த சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் கோபமாக இருக்கிறார்கள். காரணம் அண்மையில் அவர் நடிப்பில் வெளியான சீமராஜா படத்தை சிலர் நெகட்டிவ் விமர்சனம் செய்ததால் தான்.

ஒவ்வொரு முறையும் அவரின் படம் வெளியான பின் இதுபோல சிலர் செய்து வருவது தொடர்கதையாகிவிட்டது. அவருக்கு ஆதரவாக நெப்போலியன் கூட பேசியிருந்தார்.

இந்நிலையில் சிவாவின் தயாரிப்பில் அவரின் நண்பர் அருண்ராஜா இயக்கியுள்ள கனா படத்தில் வாயாடி பெத்த புள்ள பாடல் 35 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இப்பாடலை சிவகார்த்திகேயன், அவரின் மகள் ஆராதனா மற்றும் விஜய லட்சுமி சூப்பர் சிங்கர் குழுவினர்கள் பாட திபு இசையமைத்துள்ளார்.