Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எந்த பிக்பாஸிலும் இல்லாதளவில் தமிழில் இதுவே முதல் முறை! கமல்ஹாசனே கூறிய உண்மை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 இறுதி நாளான 100 வது நாளை எட்டிவிட்டது. கடந்த வருடத்தை தொடர்ந்து கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த வாரம் யாஷிகா, பாலாஜி இருவரும் வெளியேறிவிட்டார்கள். ஐஸ்வர்யா மீண்டும் காப்பாற்றப்பட்டிருப்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜய லட்சுமி ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களே இறுதிப்போட்டியாளர்கள் என பிக்பாஸும் அறிவித்துவிட்டார்.

இதே வேளையில் கமல்ஹாசன் எந்த பிக்பாஸிலும் இல்லாதளவில் இங்கே தான் இறுதியில் பெண்களே இறுதிப்போட்டியாளர்களாக இருக்கிறார்கள் என குறிப்பிட்டிருந்தார்.

ஓட்டெடுப்பு தொடங்கிவிட்டது. பொறுத்திருப்போம் முதல் மூன்று இடத்தை பிடிக்கப்போவது யார் என தெரியும் வரை. கடந்த வருடம் ஆரவ், சினேகன், ஹரிஷ் கல்யாண், கணேஷ் வெங்கட்ராமன் என நால்வரும் ஆண்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.