Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் இப்படியான ஒரு மெர்சலான ஸ்பெஷல் இருக்கிறதாம்!

விஜய் நடித்துள்ள சர்கார் படம் வரும் வரும் தீபாவளிக்கு திரை விருந்தாக வரவுள்ளது. முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் பல முக்கிய விசயங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் இன்று மாலை நடைபெறவுள்ளது. ஏற்கனவே ரஹ்மான் இசையில் வெளிவந்துள்ள சிம்டாங்காரன், ஒரு விரல் புரட்சி ஆகிய பாடல்கள் அதிக பார்வைகளை பெற்று ட்ரண்டிங்கில் இடம் பிடித்தது. சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் மெர்சல் ஸ்பெஷலும் இருக்கிறதாம்.

ரஹ்மான் இசையமைப்பில் கடந்த வருடம் வெளியான ஆளப்போறான் தமிழன் பாடல் 75 மில்லியன் பார்வைகளை பெற்றிருப்பது தான் அந்த முக்கியமான ஸ்பெஷலாம். இந்த இரு படங்களுக்கும் பாடல்களை எழுதியுள்ளது விவேக் தான். அவரும் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.