Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தும் நோட்டா படத்திற்கு வந்த சோதனை! உண்மையான வசூல் இதோ

தமிழ் நாட்டில் தற்போது அடுத்த இளையதளபதி போல நடிகர் விஜய் தேவரகொண்டாவை பேசி வருகிறார்கள். அர்ஜூன் ரெட்டி படம் மூலம் அவருக்கு தமிழ். தெலுங்கில் பெரும் ரசிகர்கள் கூட்டம் கிடைத்துவிட்டது.

தற்போது அவருக்கு நோட்டா படம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் நாளே உலகம் முழுக்க ரூ 14 கோடிகளை வசூலித்துள்ளது. நல்ல ஷேரும் கிடைத்திருக்கிறது.

ஆனால் அமெரிக்காவில் இப்படத்திற்கு வசூல் சரிவு தானாம். அவருடை முந்தய இரண்டு படங்களான அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் Premier காட்சியே $1 மில்லியன் டாலர்களை தாண்டி வசூல் செய்தது.

அதிலும் கீதா கோவிந்தம் $2.5 மில்லியன் டாலர் கலெக்‌ஷனை அள்ளியது. இந்நிலையில் நோட்டா $325k டாலர்கள் (அதாவது $3.25 லட்சம்) மட்டுமே கிடைத்துள்ளதாம்.