Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நம்பர் 1 இடத்தை பிடித்த விஜய் ஆண்டனி! விஜய்யின் சர்க்காருக்கு சவால் - வீடியோ இதோ

விஜய் ஆண்டனி என்றால் உடனே பலருக்கும் அவரின் பிச்சைக்காரன் படம் தான் நினைவிற்கு வரும். இப்போதெல்லாம் டிவியில் அந்த படத்தை அடிக்கடி ஒளிபரப்புகிறார்கள்.

சைத்தான், எமன் என அடுத்தடுத்து ஒரு திரில்லரான கதைகளை கொடுத்து வந்தார். ஆனால் அண்ணாதுறை, காளி என கடைசியாக வந்த அவரின் படங்கள் எதிர்பார்த்த இடத்தை பிடிக்க தவறியது.

இந்நிலையில் அடுத்ததாக அவரின் நடிப்பில் திமிரு பிடிச்சவன் தீபாவளிக்கு வெளியாகிறது. அதே நேரத்தில் விஜய் நடிப்பில் வெளிவரும் சர்க்கார் படத்துடன் மோதலில் இறங்குகிறது.

இந்நிலையில் நேற்று வெளியான இப்படத்தின் டீசர் youtube ல் #1 ON TRENDING என்ற இடத்தை பிடித்துள்ளது. அதை 5.67 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதனால் தீபாவளிக்கு சூடான மோதல் இருக்குமோ என்ற எண்ணம் எழுகிறது.