Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ்க்கு பின்னால் பலருக்கும் தெரியாத விசயத்தை போட்டுடைத்த தமிழ் நடிகை! சிக்கிய பிரபலம் - ஷாக் ஆக்கிய சர்ச்சை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 அண்மையில் தான் நடந்து முடிந்தது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது ஹிந்தியில் சீசன் 12 நடைபெற்றுகிறது. இதில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கலந்துகொண்டுள்ளார்.

வந்த ஓரிரு நாளிலே இவர் சர்ச்சையில் சிக்கினார். இந்நிகழ்ச்சியில் அவர் அண்மையில் தன் மனைவி புவனேஷ்வரியுடன் 7 வருடங்கள் காதலில் இருந்ததை பற்றி கூறினார்.

இதை கண்டு தற்போது பொங்கியுள்ளார் நடிகை நிகிஷா படேல். புவனேஷ்வரியுடனான திருமணத்திற்கு முன்பு என்னுடன் அவர் ஒருவருடம் லிவ் இன் டூகெதர் வாழ்க்கையில் இருந்தார்.

2012 ல் அவரை விட்டு பிரிந்து 5 வருடங்கள் அமைதியாக இருந்தேன். ஆனால் அப்பிரிவிலிருந்து முழுமையாக விடுபட முடியவில்லை. பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

பிக்பாஸில் தான் ஒரு மகான் போல அவர் காட்டிக்கொள்கிறார். அவரின் மறுபக்கம் எனக்கு தான் தெரியும். அவருக்கு பெண்கள் மீது எப்போதும் மரியாதை என்பதே கிடையாது என கூறியுள்ளார்.