Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் படத்தை தொடர்ந்து சர்க்கார் படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பு!

விஜய் நடிப்பில் சர்க்கார் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளன. தீபாவளிக்கு ஸ்பெஷல் ரிலீஸாக உலகம் முழுக்க வரவுள்ளது. ரஹ்மான் இசையில் பாடல்களும் ட்ரெண்டாகிவிட்டது.

முருகதாஸ் இயக்கத்தில் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், யோகிபாபு என பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வரும் நவம்பரில் வெளியாகவுள்ளது.

ஏற்கனவே மெர்சல் படம் அதிரிந்தி என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் முருகதாஸின் இயக்கத்தில் வந்த ஸ்பைடர் படம் ரசிகர்களை ஈர்த்தது. இதனால் சர்க்கார் படம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் இப்படத்தை தெலுங்கு தேசத்தில் அசோக் வல்லபாணி தெலுங்கு ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளாராம்.