Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் அடுத்த பட ஹீரோயின் இவர் தானா? போடு அப்ப சூப்பரா தான் இருக்கும்

அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் வரும் 2019 ஜனவரி மாதம் பொங்கல் ஸ்பெஷல் ரிலீஸாக வரவுள்ளது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் பற்றிய பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது. இதில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் தான் அஜித்துடன் இணையவுள்ளார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் தற்போது அஜித்தின் அடுத்த பட ஹீரோயின் நஸ்ரியா என பேசப்படுகிறது. மேலும் நஸ்ரியா தமிழ் சினிமாவுக்கு வரவிருப்பதாகவும், விரைவில் முக்கிய தகவல் வரும் என முகநூலில் கூறியுள்ளார்.

ஒரு பக்கம் நஸ்ரியாவும் அஜித்தின் ரசிகை. ஜோடியாக வந்தால் நன்றாக தான் இருக்கும். நல்ல ரீ எண்ட்ரியாக இருக்கும். பொறுத்திருந்து பார்த்திருப்போம்.