Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியாவிலேயே சர்கார் தான் No.1 - பாலிவுட் படங்கள் கூட நெருங்க முடியவில்லையே

சமீபத்தில் வெளிவந்த சர்கார் டீஸர் மிக பிரமாண்டமான வரவேற்பை பெற்றது. 2 நாட்களில் 2 கோடிக்கும் அதிகமானோர் இந்த டீசரை பார்த்துள்ளனர். 12 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளது.

படம் தீபாவளிக்கு வெளிவருவதால், தற்போது ஆவலுடன் இருக்கும் ரசிகர்கள், கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் IMDb இணையத்தளத்தில் தற்போது அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் படங்கள் பட்டியலில் சர்கார் முதலிடம் உள்ளது. நேற்று 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் சர்கார் பற்றித்தான் அந்த இணையத்தளத்தில் தேடியுள்ளனர்.

முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.