Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா! புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை

நடிகை நயன்தாரா தற்போது அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருக்கிறார். அஜித்துடன் அவர் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகிறது. இருதரப்பு ரசிகர்கள் இதனை எதிர்பார்த்துள்ளனர்.

முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்ட நயன்தாரா தற்போது அடுத்த லெவல் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் அவருக்கு இமைக்கா நொடிகள் படம் வெளியானது.

அதே வேளையில் அவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இருவரும் ஏற்கனவே வேலைக்காரன் படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர்.

தற்போது இதே ஜோடி எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படத்திலும் அது தொடர்கிறது. படப்பிடிப்பு வேலைகள் தொடங்கியுள்ளது. இதில் நடிகை ராதிகாவும் உள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது ராதிகா வெளியிட்டுள்ளார்.