Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அசிங்கமா இல்ல! வடசென்னை படத்தை கழுவி ஊற்றிய பிரபல தயாரிப்பாளர் - கடும் கண்டனம்

வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 18 ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வசூலும் நல்ல முறையில் கிடைத்து வந்ததோடு வெற்றி விழாவும் கொண்டாடிவிட்டார்கள்.

வடக்கு சென்னையை மையப்படுத்தி கதை எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தில் ஆபாசமான வார்த்தைகளை கொச்சையான பேயிருந்தாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்நிலையில் பல படங்களை எடுத்த தயாரிப்பாளர் கே.ராஜன் படத்தின் இயக்குனர் வெற்றி மாறனையும், ஹீரோ தனுஷ், ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஷையும் திட்டியுள்ளார்.

ஆடுகளம், விசாரணை போன்ற தரமான படங்களை எடுத்த இயக்குனர் ஏன் இப்படியான கேவலமான வார்த்தைகளை படத்தை எடுக்க வேண்டும்.

ஆண், பெண் குறிகளை ஹீரோ ஹீரோயினே கொச்சையாக பேசுவது மோசமானதாக இருக்கிறது. எப்படி இப்படி ஒரு கதையை வெற்றிமாறனால் எடுக்க முடிந்தது? என்ன தைரியம் என கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.