Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

100 வருஷத்தில் சர்கார் தான் நம்பர் 1: பிரபலம் அதிரடி தகவல்

சர்கார் படம் இன்னும் ஒரு வாரத்தில் திரைக்கு வருகிறது. அதனால் ரசிகர்கள் அனைவரும் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த படத்தின் மொத்த ப்ரீ-ரிலீஸ் பிசினஸ் 200 கோடி ரூபாயை தாண்டிவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இதுபற்றி பேசியுள்ள பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் "கடந்த 100 வருட தமிழ் சினிமாவில் சர்கார் தான் நம்பர் 1" என கூறியுள்ளார்.

மேலும் மெர்சல் பட வசூல் பற்றி பேசியுள்ள அவர் மெர்சல் வசூல் எந்திரன் பட வசூலை விட அதிகம். இருப்பினும் பாகுபலி தான் தற்போது வரை முதலிடத்தில் உள்ளது என கூறியுள்ளார்.

பாகுபலி தெலுங்கு படம் என்பதால், நேரடி தமிழ் படமான மெர்சல் தான் முதலிடம் என்று சொல்லலாம் என அவர் கூறியுள்ளார்.