Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் பட சர்ச்சையை அடுத்து புதிதாக கிளம்பிய எதிர்பாராத சர்ச்சை! அதிர்ச்சியாக்கிய இயக்குனர்

சர்கார் படத்தின் கதை பிரச்சனை முடிந்து ஒரு வழியாக நல்ல தீர்வு வந்துவிட்டது. வருத்தத்தில் இருந்த சில தீவிர ரசிகர்கள் மகிழ்ச்சியானார்கள். இந்நிலையில் நேற்று சமூகவலைதளத்தில் கதை என்னுடையது என வேறு சிலரும் தங்களுக்கு நடந்ததை பதிவிட்டனர். இதில் இயக்குனர் வெற்றி மகாலிங்கமும் ஒருவர்.

2008 சுப்பிரமணியபுரம் படம் சூப்பட் ஹிட்டானது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படத்தின் கதை என்னுடையது என பல வருடங்களாக நானும் போராடி வருகிறேன்.சந்துரு என்ற பெயரில் மதுரையின் பல முக்கிய இடங்களில் நடந்த சம்பவத்தை வைத்து படமாக எடுக்க முயற்சியில் இறங்கினேன்.

வின்னர் ராமச்சந்திரன் என்பவர் படத்தை தயாரிக்க ஜெய், சூரி, விசித்திரன், பூபதி என போட்டோ ஷூட் நடிக்கப்பட்டது.தேவா இசையமைக்க இருந்தார். பாடலுக்கு சினேகன் என முடிவு செய்திருந்தோம். எனக்கு அதிர்ஷடம் இல்லாததால் படம் ட்ராப். பின்னர் 300 பேரிடமாவது கதை சொல்லியிருப்பேன்.

அதில் இயக்குனர் பாலா, சூர்யா, கார்த்தியிடம் கூறினேன்.சூர்யா ஓகே சொன்னதால் தினமும் அவரை ஃபாலோவ் செய்தேன். அப்போது ஞானவேல்ராஜா அப்போது தான் சுப்பிரமணியபுரம் கதை பற்றி சொன்னார்.அதிர்ச்சியாகி விட்டேன். என்னுடைய கதை என சொல்ல முடியாத படி சந்துரு படத்தின் சில காட்சியை மட்டும் கொண்டு 1980 க்கு மாற்றியிருந்தார்கள்.இத்தனைக்கும் என்னுடைய கதையை எழுத்தாளர் சங்கத்திலும் பதிவு செய்திருந்தேன்.

புகார் கொடுத்தேன். போராடினேன். ஞாயம் கிடைக்கவில்லை.அந்த சமயம் என்னை அடிக்கடி ஒரே தெருவில் டீக்கடையில் சந்தித்து பேசிய இயக்குனர் சசிகுமாரும் என்னை யார் என தெரியாது என கூறிவிட்டார். காலம் வரும் என பொறுமையோடு அடுத்த பட வேலைகளின் இறங்கினேன்.

என் கதையை வைத்து படமாக எடுத்த சசிகுமாரும் வெற்றி பெறவில்லை.சர்கார் கதை விசயத்தில் என் போன்ற ஒருவருக்கு ஞாயம் கிடைத்தது என்பதில் மகிழ்ச்சி. வேறெந்த உள்நோக்கமும் கிடையாது என கூறியுள்ளார்.