Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை பின்னுக்கு தள்ளி ரெக்கார்டை புரட்டி போட்டு பெரும் சாதனை படைத்த பிரபல நடிகர்! தளபதி ரசிகர்கள் ஷாக்

விஜய் நடிப்பில் தீபாவளி ஸ்பெஷலாக சர்கார் படம் வெளியாகிவிட்டது. ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவரின் முந்தய மெர்சல் படத்தை இப்படம் வசூல், அதிக தியேட்டர்கள் என ஒப்பிட்டால் சர்கார் முந்திவிட்டது என்றே சொல்லலாம்.

ஆனால் கேரளாவில் விஜய் ரசிகர்கள் அதிகம் இருந்ததும் படத்திற்கு கூட்டமும் இல்லை, வசூலும் எதிர்பார்த்த அளவில் இல்லையாம். படத்தை எடுத்துவிட போவதாக செய்திகளும் வந்தது.

இந்நிலையில் ஷாருக்கான் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஜீரோ படத்தின் ட்ரைலர் வெளியானது. இணையதளத்தில் வந்து ஐந்து நாட்களே ஆன நிலையில் 77 மில்லியன் பார்வைகளை பெற்று சர்கார் படத்தின் டீசரை பின்னுக்கு தள்ளி அதிகமாக பார்க்கப்பட்ட இந்திய திரைப்படத்தின் டிரெய்லர் என்ற சாதனை படைத்துள்ளது.

யூடுயூபில் இதுவரை இருந்த இந்திய சினிமா படத்தின் அனைத்து சாதனைகளையும் முறியடித்து குவிட்டதாக சொல்லப்படுகிறது.

சர்கார் பட டீசர் வெளியாகி இருவாரங்கள் ஆகிவிட்ட நிலையில் 30 மில்லியன்+ பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.