Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிறப்பாக ஓடும் சர்கார்! அந்த ஒரு காட்சி தான் செம - முக்கிய கோரிக்கை வைத்த பிரபல திரையரங்கம்

சர்கார் படம் தீயேட்டரில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது என பல இடங்களிலிருந்தும் தகவல்கள் சொல்கின்றன. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றது.

வசூலும் அதிகமாக தான் இருக்கிறது. அண்மையில் இப்படத்திற்காக திருநெல்வேலி ராம் முத்துராம் சினிமாஸ் பிரம்மாண்ட கட்டவுட்டை வைத்து அசத்தியது.

இந்நிலையில் அவர்கள் இயக்குனர் முருகதாஸுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு படம் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல பிரச்சனைகளை தாண்டி நீங்கள் வயதிற்கேற்றார் போல் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. ஓவ்வொரு காட்சிகளும் ரசிக்கப்படுகிறது.

அதிலும் மாநாடு காட்சி தான் சூப்பர். அதிலும் டையலாக் டாப், அதிலும் உங்கள் கோபத்தை பார்க்க முடிகிறது. வெறுப்புகளை மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள். வெற்றிகள் வரும்.

4 ஆவதாக மீண்டும் ஒரு படம் விஜய் சாருடன் நீங்களே பண்ணலாமே என கூறியுள்ளனர். இதற்கு முருகதாஸும் நன்றி தெரிவித்துள்ளார்.