Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ்-சிவகார்த்திகேயன் நேரடி மோதல்?

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகமான புதிதில் அவருக்கு அதிகம் ஆதரவு கொடுத்தவர் நடிகர் தனுஷ். பல படங்கள் இருவரும் ஒன்றாக பணியாற்றிய நிலையில் தற்போது தனித்தனியாக தங்கள் ட்ராக்கில் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அவர்கள் இருவரும் பாக்ஸ்ஆபிஸில் நேரடியாக மோதவுள்ளதாக கூறப்படுகிறது. 'மாரி 2' திரைப்படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அப்போது சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படத்தை வெளியிடவுள்ளார்களாம். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிற்து.

இவர்களுடன் விஜய் சேதுபதியின் சீதக்காதி படமும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.