Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல இயக்குனரை ஓங்கி கன்னத்தில் அறைந்த பிரபல நடிகை! இத்தனை முறையா - ஆனால் கடைசியில்??

தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஷ்கின் தனித்தன்மையானவர். அவரின் படங்கள் என்றாலே ஒரு தனி டெக்னிக் இருக்கும் என்பது தீவிர ரசிகர்களின் கணிப்பு. அதே வேளையில் சில படங்களில் நடித்தும் வருகிறார்.

தற்போது தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் விஜய் சேதுபதி, மிஷ்கின், பகத் பாசில், சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தில் நடிகை நதியா மிஷ்கினை கன்னத்தில் அறைவது போல காட்சியிருக்கிறதாம். இதற்காக மிஷ்கின் தன்னை நிஜமாகவே அடிங்கள் என சொல்ல நதியாவும் செய்திருக்கிறார். அப்படியாக 56 முறை டேக் எடுத்தார்களாம்.

இதனால் கடுப்பான நதியா இனிமேல் என்னால் முடியாது வேறு யாரையாவது நடிக்கவையுங்கள் என சொல்லி கிளம்பிவிட்டாராம். பின்னர் அந்த வேடத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் இரண்டே டேக்கில் முடித்துவிட்டாராம்.

பல அடிகள் விழுந்ததால் மிஷ்கின் நதியாவை வைத்துக்கொண்டே இனிமேல் அவரிடம் நான் அடிவாங்கி நடிக்க மாட்டேன். நான் விலகுகிறேன். நடிக்க வராவதங்களை ஏன் நடிக்க வைக்கிறீங்க என சொன்னதால் தான் நதியா விலகிவிட்டாராம்.