Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருமணமாகி தலைகாட்டாத நமீதா இப்படி மாறிவிட்டாராம்! இதுவரை இல்லாத செம மிரட்டல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1ன் மூலம் போட்டியாளராக பங்கேற்றவர் நடிகை நமீதா. இதன் மூலம் அவரும் சில காலங்கள் ட்ரெண்டில் இருந்தார். அதை விட்டு வெளியே வந்த பின் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் வீர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கடந்த சில வருடங்களாகவே நமீதாவுக்கு பட வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் வாய்ப்பு வந்துள்ளது. இது அவரின் ரீஎண்ட்ரி என சொல்லலாம்.

சிவா மனசுல புஷ்பா படத்தின் ஹீரோ வாராகியுடன் இணைந்து அகம்பாவம் என்ற படத்தில் அவர் பெண் பத்திரிகையாளராக நடிக்கவுள்ளாராம். இதற்காக அவர் பல செய்தியாளர்களை கவனித்துக்கொண்டு இருக்கிறாராம். சத்ரபதி படத்தின் இயக்குனர் மகேஷ் இப்படத்தை இயக்குகிறாராம்.