Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட தள்ளிபோகிறதா? வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த பதில்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸ் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அது தள்ளிப்போகிறது என இன்று தகவல் பரவியது.

இன்று ஆடியோ வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பில் பொங்கல் ரிலீஸ் என குறிப்பிடப்படாததே காரணம்.

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் அளித்துள்ளார். "பொங்கல் ரிலீஸ் குறிப்பிட மறந்துவிட்டோம்" என அவர் கூறியுள்ளார்.

இதனால் படம் பொங்கலுக்கு வருவது மீண்டும் உறுதியாகியுள்ளது.