Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்63 முதற்கட்ட ஷூட்டிங் இந்த இடத்தில் தான் - வெளியான விவரம்

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை அட்லீ இயக்கவுள்ளார். படத்தின் பூஜை ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில் இயக்குனர் அட்லீ லொகேஷன் பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ஹீரோயினாக நயன்தாரா தேர்வாகியுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்து ரசிகர்கள் கொண்டாடிவரும் நிலையில், தற்போது முதற்கட்ட ஷூட்டிங் பற்றிய விவரமும் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட ஷூட்டிங் சென்னையில் தான் துவங்குமாம். அதற்காக சென்னை OMR சாலையில் லொகேஷன் பார்த்து வைத்துள்ளாராம் அட்லீ.