Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாரா மட்டுமின்றி விஜய்63ல் இணைந்துள்ள மற்றொரு இளம் நடிகை?

நடிகர் விஜய் அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கும் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என சமீபத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் மேயாத மான் புகழ் நடிகை இந்துஜா ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

இந்த படத்தில் அவரின் ரோல் என்னவாக இருக்கும் என பெரிய எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதிலும் தங்கை வேடமாக இருக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.